தில்லை அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2359 days ago
மந்தாரக்குப்பம் : மேட்டுக்குப்பம் தில்லை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை மாத அமாவாசையொட்டி, மந்தாரக்குப்பம் அடுத்த மேட்டுக்குப்பம் தில்லை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 10:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம், நள்ளிரவு 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.