உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் பூம்புகாரில் தீபத்திருவிழா கண்காட்சி

சென்னையில் பூம்புகாரில் தீபத்திருவிழா கண்காட்சி

சென்னை : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில்,  பாரம்பரிய பித்தளை விளக்குகளின் விற்பனை, கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் எனும், பூம்புகார் நிறுவனம்  சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள  விற்பனையகத்தில், ’தீபத்திரு விழா’ விற்பனை, கண்காட்சி நடத்தப்படுகிறது.இங்கு,  பித்தளை, களிமண் போன்றவைகளால், விளக்குகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில், 8 அடி லட்சுமி கிளை விளக்கு, 16 வகை  சோடச உபசார செட், 18 அங்குலம் முதல், 72 அங்குலம் உயர அளவுள்ள நகாசு  விளக்குகள், விநாயகர், லட்சுமி தீபம், 108 அஷ்டோத்ர தீபம் ஆகியவை இடம்  பெற்று உள்ளன.

மேலும், மங்கள, சங்கு சக்கர தீபம், தூண்டா விளக்கு, தொங்கு விளக்கு,  பஞ்சலிங்க, நவ ஜோதி, நவக்கிரக, பஞ்சாட்சர, திருமலை தீபங்கள்,  பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.அனைத்து விளக்குகளுக்கும், 10 சதவீதம்  சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. டிச., 10ம் தேதி வரை நடக்கும் இந்த  கண்காட்சிக்கு, பார்வையாளர்கள் தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00  மணி வரை,இலவசமாக அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !