மதுரை வழிபாட்டை குறிக்கும் வாண வேடிக்கை: இந்திரா சவுந்தரராஜன் பேச்சு
ADDED :2239 days ago
மதுரை : மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் பக்தி சொற்பொழிவு ஸ்ரீமடம் தலைவர் ராமசுப்பிர மணியன் தலைமையில் நடந்தது.
குரு மகிமை எனும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் பேசியதாவது: மனிதனு டைய பிறப்பிலிருந்து இறப்பு வரை தண்ணீர் உடன் வந்து கொண்டே உள்ளது. தண்ணீர் மந்திர சக்தியை கிரஹிக்க வல்லது. சன்யாசிகள் மற்றவர் கைபடாத நீரினை தனக்கும், பூஜை களுக்கும் பயன்படுத்துவர்.கோயிலில் வாண வேடிக்கை விழா நாட்களில் வெடிப்பதன் காரணம் இறைவனை தரிசிக்க அனைவரையும் அழைப்பதாகும், என்றார். ஏற்பாடுகளை ஸ்ரீமடம் சுப்பிரமணியன், ஸ்ரீவத்சன், சந்திரசேகரன், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஜனார்த்தனன் செய்தனர். பொருளாளர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.