உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டியில் சோமவார வழிபாடு

பண்ருட்டியில் சோமவார வழிபாடு

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை 2வது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் (நவம்., 25ல்) மாலை 4:00 மணிக்கு உற்சவர்  வீரட்டானேஸ் வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்  நடந்தது. மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு மகா அபிஷேகம்,  அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு உற்சவர்  வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி வெள்ளி ரிஷப வாகனத்தில்  எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !