நடுவீரப்பட்டு அருகே மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :2302 days ago
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் உள்ளது.
சித்தர் பரங்கிப்பேட்டையார் என்கிற குழந்தைவேல் சுவாமி, கோவிலில் உள்ள பிரணவ தீர்த்தத்தில் ஜல சமாதி அடைந்தார். அவருக்கு மலையின் தென்மேற்கு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது.அவரது ஜீவசமாதியில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன்படி, அமாவாசையை முன்னிட்டு நேற்று (நவம்., 26ல்) மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.