உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருவிழா கொடியேற்றம்

விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருவிழா கொடியேற்றம்

விழுப்புரம் : விழுப்புரம், நாப்பாளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ்  சவேரியார் ஆலயத் தில் 145வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கியது.

விழாவையொட்டி, நேற்று (நவம்., 26ல்) மாலை 5:30 மணிக்கு கொடி பவனியும், புனித பிரான் சிஸ் சவேரியார் ஆலய வளாகத்தில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடந்தது.

நிகழ்ச்சியை, கோணான்குப்பம், திருத்தல அதிபர் தேவசகாயராஜ் நடத்தி  வைத்தார். இதை யடுத்து, தினமும் மாலை 5:30 மணிக்கு தேர்பவனியும்,  திருப்பலியும் நடக்கிறது. வரும் 1ம் தேதி மதியம் 1:00 மணிக்கு, தியானமும்,  மாலை 5:.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. தொடர்ந்து 3ம் தேதி, காலை  7:30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை, புதுவை - கடலூர்  உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் நடத்தி வைக்கிறார்.

மாலை 5:30 மணிக்கு, திருப்பலி, ஆடம்பர தேர் பவனி புனித அன்னாள்  மேல்நிலைப் பள்ளி, முதல்வர் சகாய அருள்செல்வம் தலைமையில் நடக்கிறது.  கொடியேற்ற விழாவில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !