உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!

சேலம்: சேலத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷ தினத்தன்று, சிவன் கோவிலுக்கு சென்று வழிபடும் பக்தர்கள், அனைத்து தெய்வங்களையும், தேவர்களையும் வணங்கிய பலனை பெறுவதாக ஐதீகம். சேலம் சுகவனேஸ்வரர் கோவில், கரபுரநாத ஸ்வாமி கோவில், காசி விஸ்நாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !