உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் மாட வீதிகள் ‘கிளீன்’

மயிலாப்பூர் மாட வீதிகள் ‘கிளீன்’

மயிலாப்பூர்: மயி­லாப்­பூர், கபா­லீஸ்­வ­ரர் கோவிலை சுற்­றி­யுள்ள மாட வீதி­களில், சாலையை ஆக்­கி­ர­மிப்பு வைக்­கப்­பட்­டி­ருந்த கடை­களை, மாந­க­ராட்­சி­யி­னர் நேற்று அதி­ர­டி­யாக அகற்­றி­னர். மயி­லாப்­பூர், கபா­லீஸ்­வ­ரர் கோவி­லின், நான்கு மாட­வீ­தி­க­ளி­லும் நடை­பா­தையை ஆக்­கி­ர­மித்து, ஏரா­ள­மான கடை­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இத­னால் பக்­தர்­கள், சாலை­யில் நடந்து செல்­லும் நிலை ஏற்­பட்­டது.

கோவி­லுக்கு வரும் வாக­னங்­களை நிறுத்த வழி­யின்றி, வய­தா­ன­வர்­கள், மாற்­று­த்தி­ற­னா­ளி­கள், வெகு துாரம் நடந்து, கோவி­லுக்கு சென்று வந்­த­னர். கோவில் பிர­தான நுழை­வா­யில் அமைந்­துள்ள, பொன்­னம்­பல வாத்­தி­யார் தெரு, 20 அடி அக­லம் கொண்­டது. இந்த தெரு­வின் இரு பக்­கங்­க­ளி­லும், 50க்கும் மேற்­பட்ட பூ மற்­றும் பூஜை பொருட்­கள் விற்­கும் கடை­கள், 10 அடிக்கு மேல் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தன. கடை­களில் பணி­பு­ரி­ப­வர்­கள், வாக­னங்­களை நிறுத்தி வைத்­தும், பக்­தர்­க­ளின் இரு­சக்­கர வாக­னங்­கள் கூட, செல்ல முடி­யாத நிலை இருந்­தது. இந்­நி­லை­யில், நேற்று காலை, மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள், மயி­லாப்­பூர் உதவி கமி­ஷ­னர் நெல்­சன், ஆய்­வா­ளர் செந்­தில்­கு­மார் தலை­மை­யி­லான போலீஸ் பாது­காப்­பு­டன், ஆக்­கி­ர­மிப்பு கடை­களை அகற்­றி­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !