கும்மம்பட்டியில் விநாயர், செல்வவிநாயகர் வருடாபிஷேகம்
ADDED :2148 days ago
செம்பட்டி : வீரக்கல் அருகே கும்மம்பட்டியில், அரசரடி விநாயர், செல்வவிநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோயில்கள் உள்ளன. கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டு கடந்த நிலையில், வருடாபிஷேகம் நடந்தது.கார்த்திகேயன் குருக்கள் தலைமையில், மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதியுடன் தீர்த்த கலசங்களுக்கு மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளுடன் புனித தீர்த்தாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.