மகுடஞ்சாவடி தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
மகுடஞ்சாவடி: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இளம்பிள்ளை அருகே, முருங்கப்பட்டி, மேல்காடு பாப்பிக்குட்டை பகுதியில், நாககாளியம்மன் கோவில் உள்ளது.
அதன் கும்பாபிஷேகம், நாளை (டிசம்., 1ல்) காலை, 7:30 முதல், 9:00 மணிக்குள் நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று (நவம்., 29ல்) காலை, கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி ஆலயத்தில், திரளான பக்தர்கள், தீர்த்தக்குடத்தில் புனிதநீரை நிரப்பினர். தொடர்ந்து, மேள, தாளம் முழங்க, ஊர்வல மாகச் சென்று, நாககாளியம்மன் கோவிலை அடைந்தனர். இன்று (நவம்., 30ல்) காலை, 10:30 மணிக்கு, கோபுர கண் திறப்பு, கலசம் வைத்தல் நடக்கும். மாலை, 5:30 மணிக்கு வேதபாராயணம், அஷ்டலட்சுமி பூஜை, மூலஸ்தானத்துக்கு தீபமேற்றுதல் நடக்கும். இரவு, 7:30 மணிக்கு, புது சிலைகளுக்கு கண்திறப்பு நடக்கும். நாளை (நவம்., 29ல்)காலை, கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.