உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் மகாதீப கொப்பரைக்கு பூஜை

திருப்பரங்குன்றம் கோயிலில் மகாதீப கொப்பரைக்கு பூஜை

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் மகாதீபம் ஏற்றப்படும் தாமிர கொப்பரைக்கு பூஜை நடந்தது.

 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிச.,2ல் காலை 9:45 முதல் 10:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நாட்களில் சுவாமி தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளுவார். டிச.,9 பட்டாபிஷேகம், டிச.,10 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள தாமிரக் கொப்பரையில் 300  கிலோ நெய், 5 கிலோ சூடம் மற்றும் காடாத்துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி  தாமிரக்கொப்பரைக்கு அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !