உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோவிலில் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு

தஞ்சாவூர் பெரியகோவிலில் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாலாலயம் நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், கடந்த 1996ல் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  இதையடுத்து கடந்த 29ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை தொடங்கியது.  தொடர்ந்து 30ம் தேதி மூலமந்திர ஹோமம், ருத்ராபிஷேகமும், மாலை, மருத்சங்கரஹணம், அங்குரார்பணம்,ரஷ்கபந்தனுடன் முதல் கால யாகசாலை நடைபெற்றது. அதன் பிறகு மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் திரையிட்ட மறைக்கப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலையும் நடைபெற்றது.

இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பெருவுடையார் சன்னதியில், செப்பு திருமேனியாலான பெருவுடையார், பெரியநாயகி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனை காண்பிக்கப்பட்டன. மற்ற மூலவர்களுக்கு பதிலாக ஆவாஹனம் செய்யப்பட்ட படத்திற்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.  கோவில் கும்பாபிஷேகம் முடியும் வரை பிரதோஷம், மகரசங்கராந்தி போன்ற விழாக்கள் நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தொவிக்கப்பட்டுள்ளன.

பந்தகால் மூகூர்த்தம்:  பாலாலயம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான 8 கால யாகசாலை பூஜைக்கள் செய்ய, கோவில் வளாகத்தில், பந்தகால் மூகூர்த்தம் நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !