உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளச்சேரி அய்யப்ப பக்தர்கள் ரத்த தானம்

வேளச்சேரி அய்யப்ப பக்தர்கள் ரத்த தானம்

வேளச்சேரி : சபரிமலைக்கு விரதம்இருந்த, 108 பக்தர்கள், நேற்று (டிசம்., 1ல்), ரத்த தானம் செய்தனர்.வேளச்சேரி சாய்சபரி சாஸ்தா சங்கம் மற்றும் அய்யப்பன் ஏகதின கோடி அர்ச்சனை குழுவினர் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். இந்தாண்டு, 150 பேர் செல்கின்றனர்.

இவர்கள், விரதம் இருக்கும்போது, ரத்த தானம் வழங்க முடிவு செய்தனர். வேளச்சேரி, வண்டிக் காரன் தெருவில் உள்ள, ஒரு பள்ளி வளாகத்தில் வைத்து, 108 பேர், நேற்று (டிசம்., 1ல்) ரத்த தானம் செய்தனர்.சேகரித்த ரத்தத்தை,அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !