உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பகவான் யோகி ராம்சுரத்குமார் 101வது ஜெயந்தி விழா

சென்னை பகவான் யோகி ராம்சுரத்குமார் 101வது ஜெயந்தி விழா

சென்னை : சென்னை, மேற்கு மாம்பலத்தில், யோகி ராம்சுரத்குமார், 101வது ஜெயந்தி விழா, நேற்று (டிசம்., 1ல்) விமரிசையாக நடந்தது.

மேற்கு மாம்பலம், கிரி தெருவில் உள்ள, ஸ்ரீ மாரியம்மன் சேவா டிரஸ்ட், கடம்பூர் சோமசுந்தர நாடார் மாளிகையில், பாலகுமாரன் குடும்பத்தினர் மற்றும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத் சங்கம் சார்பில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 101வது ஜெயந்தி விழா நேற்று (டிசம்., 1ல்) நடந்தது.நிகழ்ச்சியின் துவக்கமாக காலை, 8:00 மணிக்கு, பிரம்மஸ்ரீ முனீஸ்வர சாஸ்திரிகள் தலைமையில், ஹோமம் நடந்தது. பின், பகவான் திரு உருவச்சிலைக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் சத் சங்கத்தினரின் பகவான் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.

மாலை, 3:00 மணிக்கு, மஹாரண்யம் ஸ்ரீ முரளீதரசுவாமிஜியின் உபன்யாசம் நடந்தது; 5:00 மணிக்கு, சத்குரு ஸ்ரீ பாலகுமாரன் எழுதிய பகவான் பாடல்களை, மயிலை யோகி ராம்சுரத் குமார் சத் சங்கத்தினர் பாடினர்.நிகழ்ச்சி நிறைவாக மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ சட்டநாத பாகவதரின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !