உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா: இந்திர விமானத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை தீப திருவிழா: இந்திர விமானத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நேற்று தங்க சூரிய பிரபை வாகனத்தில், சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இரண்டாம் நாள் விழாவில், காலை, 10:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் (உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற கோலம்) சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 9:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி கோரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், இந்திர விமானத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், ஆச்சி விமானத்தில் பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும், 7ல், மஹாரத தேரோட்டம், 10 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !