திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கார்த்திகை குமார சஷ்டி
ADDED :2151 days ago
திருப்போரூர் : திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், கார்த்திகை குமார சஷ்டி நாளில், சுவாமியை வழிபட, பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாதந்தோறும் பரணி கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், சுவாமியை தரிசிக்க, ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.நேற்று, கார்த்திகை சோமவாரத்துடன் கூடிய குமார சஷ்டி என்பதால், பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து, பிரார்த்தனையாக மொட்டை அடித்தனர். எடைக்கு எடை துலாபாரம், காது குத்தல் வைபவம் மற்றும் திருமணம் நடந்தன.சஷ்டியை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜை, தீப துாப ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், கந்தனை வழிபட்டனர்.அதேபோல், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவிலில், மூன்றாவது சோமவாரத்தை ஒட்டி, 108 சங்காபிஷேகம், சிறப்பு மலர் அர்ச்சனை நடந்தது.