கிருஷ்ணராயபுரம் ஐயப்ப பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
ADDED :2240 days ago
கிருஷ்ணராயபுரம்: கணக்கம்பட்டி பகுதியில், ஐயப்ப பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கணக்கம் பட்டி பகவதியம்மன் கோவில் முன், ஐயப்ப பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. லந்தங் கோட்டை, பழைய ஜெயங்கொண்டம், மத்திப்பட்டி, புணவாசிப்பட்டி, வெள்ளியனை, கரூர் பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.