பவானி ஐயப்ப பக்தர்களால் களை கட்டும் கூடுதுறை
ADDED :2158 days ago
பவானி: கார்த்திகை மாத பிறப்பை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, சபரிமலை கோவிலுக்கு செல்கின்றனர். பக்தர்கள், கோவிலுக்கு சென்று திரும்புவோர், வழியில் உள்ள கோவில்களுக்கும் செல்கின்றனர்.
இதன்படி பவானி கூடுதுறைக்கு, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும், ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடுதுறையில் குளித்து, சங்கமேஸ்வரரை வணங்கி செல்கின்றனர். பஸ், வேன், கார்களில் குவியும் பக்தர்களால், கோவில் வளாகம் களை கட்டியுள்ளது. இவர்களால் ஓட்டல், டீ கடைகளில் வியாபாரம் அமோகமாக நடப்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.