கோபியில் கல்யாண சுப்ரமணியருக்கு வெள்ளிக்கவசம் காணிக்கை
ADDED :2158 days ago
கோபி: பச்சமலை கோவிலில், கல்யாண சுப்ரமணியருக்கு, 18 கிலோ எடையிலான வெள்ளிக்கவ சத்தை, பக்தர் காணிக்கை அளித்தார். கோபியில், பிரசித்தி பெற்ற பச்சமலை முருகன் கோவி லில், கல்யாண சுப்ரமணியர் தம்பதி சமேதராக, தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
இந்நிலையில் கோபியை சேர்ந்த, முருக பக்தர் ரமணன், 27, இந்த சிலைகளுக்கு, வெள்ளிக் கவசத்தை காணிக்கை அளித்துள்ளார். மொத்தம், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 18 கிலோ எடை யுள்ள, வெள்ளிக்கவசத்தை நேற்று (டிசம்., 2ல்) அளித்தார். கல்யாண சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை என மூவருக்கும், கிரீடம், கவசம் அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது.