சென்னிமலையில் 108 சங்கு பூஜை
ADDED :2239 days ago
சென்னிமலை: கார்த்திகை மாதத்தின், மூன்றாவது திங்கள்கிழமையை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நேற்று (டிசம்., 2ல்) நடந்தது. அதை தொடர்ந்து கைலாசநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சோமவார விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் உள்பட, திரளானோர் கலந்து கொண்டனர்.