உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகுடஞ்சாவடி அருகே மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

மகுடஞ்சாவடி அருகே மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, நேற்று (டிசம்., 2ல்) அ.புதூரில் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கடந்த, 30ல் கணபதி மற்றும் சுதர்சன ஹோமம் நடந்தது. அன்று கல்வடங்கம் ஆற்றில் இருந்து, பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று (டிசம்., 2ல்) காலை, 6:00 முதல் 7:30 மணிக்குள் மஹாகணபதி, காளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு மேல் மகாமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !