உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி துவக்கம்

பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி துவக்கம்

இடைப்பாடி: பூலாம்பட்டியில் உள்ள, கைலாசநாதர் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிகள், யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பூலாம்பட்டியில், சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.

மற்ற கோவில்களில் உள்ள சிவன், கிழக்கு நோக்கி இருக்கும். பூலாம்பட்டி கைலாசநாதர் மேற்கு நோக்கி, காவிரி ஆற்றங்கரையை பார்த்தபடி உள்ளார். மிகவும் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க, யாகசாலை பூஜை மற்றும் கோமாதா பூஜை நேற்று (டிசம்., 2ல்) நடந்தது.

இதற்கான கால்கோள் விழா தொடங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆவின் சேர்மன் ஜெயராமன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் நடந்த, ஆலய கோபுர திருப் பணி விழாவில் அப்பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !