உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

பிரான்ஸ் நாட்டு மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம்  தோல்வி அடைந்தார்.  பிரிட்டிஷ் ராணுவம்  அவரை ஆப்பிரிக்க சிறையில்  அடைத்தது. அப்போது நண்பர் ஒருவர்  சதுரங்க அட்டையைக் கொடுத்து “இது  உங்களின் சிந்தனையை தூண்டி விடும். தனிமையை போக்கும்” என்றார். ஆனால்  சிறைப்பட்டு விட்டேனே என்ற உளைச்சலால்  சிறிது காலத்தில் இறந்தார்.  பிற்காலத்தில் பிரான்ஸ் அரசு சதுரங்க அட்டையை ஏலம் விட ஆய்வு செய்த  போது அதன் நடுவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில்  சிறையில் இருந்து  தப்பிக்கும் வழி  இடம் பெற்றிருந்தது. ஆனால் அவரது உளைச்சலும், பதட்டமும்  செயல்பட விடாமல்  தடுத்தன.

க்ஷஅதைப் போல உறுதியான சிமெண்ட் தரை, மரபெட்டியைக் கூட பற்கள்,  நகத்தால் குடைந்து ஓட்டையிடும் எலி, மரத்தால் ஆன பொறிக்குள் சிக்கினால்  ஏற்படும் பதட்டத்தால் அந்த பொறியை உடைப்பதை விட்டு கம்பிக்குள் நிற்கும்.  ”பதட்டமும், மன உளைச்சலும் சிந்தனையைத் தடுக்கிறது. அதனால்  எந்நிலையிலும் ஆக்க வழியில் சிந்தித்து செயல்படுவோம்”


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !