உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனை அடைய உதவும் மனமும், புத்தியும் சுவாமி சிவயோகானந்தா பேச்சு

இறைவனை அடைய உதவும் மனமும், புத்தியும் சுவாமி சிவயோகானந்தா பேச்சு

மதுரை, :”மனம், புத்தி இரண்டும் இறைவனை அடையவும், அன்றாட வாழ்வில் வெற்றி பெறவும் உதவுகின்றன,” என, மதுரை காஞ்சி சங்கர மடத்தில் பகவத்கீதை என்ற தலைப்பில் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.

அவர் பேசியதாவது: இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டசாதனங்கள் இரண்டு. அவை மனமும், புத்தியுமாகும். அவை இயங்கும் விதம் குறித்த புரிதலும், தெளிவும் அவசியம். மனமானது சிந்திக்கவும், திட்டமிடவும், நோக்கங்களை விரிவாக்கம் செய்யவும் பயன்படும் மகத்தான கருவி.

புத்தி என்பது சிந்தனைகளில் உறுதி சேர்க்கவும், திட்டங்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத் தவும், லட்சியத்துடன் இணைக்கவும் உதவும் கருவி.மனம், புத்தி இரண்டையும் ஒருங்கிணை க்காது எச்செயலும் முழுமை பெறாது. இரண்டும் இறைவனை அடையவும், அன்றாட வாழ் வில் செயலை திறம்பட செய்து வெற்றி பெறவும் உதவுகின்றன. மனமும் புத்தியும் இவ் வளவு ஆற்றல்களை பெற்றிருந்தாலும், பல நேரங்களில் மனதில் சலனமும், புத்தியில் தடுமாற்றமும் ஏற்படுகிறது.

செய்வதறியாது பலவீனத்தால் தன் வசமிழந்து தளர்ந்தோருமுண்டு. இதற்கான காரணங் களை ஆராய்ந்து நன்மை நாமே உயர்த்தி கொள்ள பகவானால் உபதேசிக்கப்பட்ட ஆன்மிக அறிவியலே பகவத்கீதை, என்றார்.இச்சொற்பொழிவு நாளை (டிசம்., 8ல்) வரை மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !