திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு நாளை புதியவஸ்திம், குடைகள்
ADDED :2142 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள், நம்பெருமாள், தாயார், இராமானுஜருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம், அதன்படி இவ்வாண்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் திரு .Y V.சுப்பா ரெட்டி , நிர்வாக அதிகாரி அனில்குமார்சிங்கால் IAS ஆகியோர் தலைமையில் புதிய வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க உள்வீதிகளில் ஊர்வலமாக வந்து ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.வேணுசீனிவாசன் , இணை ஆணையர் திரு.ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோரிடம் வழங்கும் வைபவம் நடை பெற உள்ளது.