திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வஸ்திர மரியாதை
ADDED :2169 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வஸ்திர மரியாதை கொண்டுவந்தனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள், நம்பெருமாள், தாயார், இராமானுஜருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம், அதன்படி இவ்வாண்டு இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வஸ்திர மரியாதை கொண்டுவந்தனர். அதனை, ஸ்ரீரங்கம் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், சுந்தர் பட்ட ஆகியோர் பெற்றுக் கொண்டு, ஊர்வலமாக கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.