சபரிமலைக்கு பழம், தேனுடன் வந்த பக்தர்கள்
ADDED :2232 days ago
சபரிமலை: கதளி வாழைப் பழம், தேன் உள்ளிட்ட காட்டில் விளையும் பொருட்களுடன் பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டு சென்றனர். திருவனந்தபுரம் மாவட்டம் அகஸ்தியர்கூடம் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் இருந்து காணி இன மக்களில் 101 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, ஊர் மூப்பன் (தலைவர்) மாதேயன் காணி தலைமையில் சபரிமலை வந்தனர். மூங்கில் கம்புகளில் காட்டுதேன் மற்றும் கதளி பழக்குலைகள், கரும்பு, காட்டு குந்திரிங்கம், மூங்கிலில் செய்யப்பட்ட பெட்டிகள் போன்றவற்றை கோயிலில் ஐயப்பனுக்கு காணிக்கையாக்கி வழிப்பட்டனர்.