பாரதப்புழை ஆற்றில் மகாமக மகோற்சவம்
ADDED :2234 days ago
பாலக்காடு : மலப்புரம் மாவட்டம் திருநாவாயாவிலுள்ள புனித நதியான பாரதப்புழை ஆற்றின் கரையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய திருமூர்த்திகளின் திருக்கோவில்கள் உள்ளன. இங்கு வரும் ஜன., 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் கும்பமேளாவை நினைவூட்டும் வகையில் மகாமக மகோற்சவம் நடைபெறுகிறது. ஓரல் ஹிஸ்ட்டரி ரிசர்ச் பவுண்டஷேன், உக்ர நரசிம்மமூர்த்தி அறக்கட்டளையும் ஒருங்கிணைந்து உற்சவத்தை நடத்துகிறது. கனடாவை சேர்ந்த ரமஷே் நடராஜ அய்யரின் தலைமையில் கனடா, அமேரிக்கா, மலஷேியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்தும், நம்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தம் 200 பேர் பங்கேற்று யாகத்தை நடத்துகின்றனர்.