உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் மூலவர் சிலை பிரதிஷ்டை

திருப்போரூரில் மூலவர் சிலை பிரதிஷ்டை

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, சிறுதாவூர் கிராமத்தில், பழமை வாய்ந்த ஆரணிவல்லி சமேத பூதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலை, பல லட்சம் ரூபாய் மதிப்பில், சிறு தாவூர் கிராம பிரதோஷ வழிபாட்டு குழுவினர் சீரமைத்தனர். இதையடுத்து, இக்கோவில் மூலவர் பூதகிரீஸ்வரர், தாயார் ஆரணிவல்லி மற்றும் முருகப் பெருமான் சிலை பிரதிஷ்டை, நேற்று (டிசம்., 11ல்) கோலாகலமாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதினர். இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் அதிகம் பேர் பங்கேற்றனர்.வரும், 2020ம் ஆண்டு பிப்., 5ம் தேதி, இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, விழா குழுவினர் தீர்மானித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !