செஞ்சியில் பவுர்ணமி சிறப்பு ஹோமம்
ADDED :2134 days ago
செஞ்சி:செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.செஞ்சி அடுத்த செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து செத்தவரை சிவஜோதி மோனசித்தர் தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது.
ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது.