பராமரிப்பில்லாத தீர்த்தங்கர் சிலை
ADDED :2142 days ago
திருவங்கரணை: சமணர்களின் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. சமணர்கள் வாழ்ந்த வரலாற்று அடையாளங்களை, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், ஆங்காங்கே காண முடிகிறது. சில கிராமங்களில் முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின்றி, சமணர்களின் சிலை கிடப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வாலாஜாபாத் அடுத்த திருவங்கரணை கிராமத்தில் உள்ள ஒரு குளக்கரையில், சேதமடைந்த தீர்த்தங்கரின் சிலை காணப்படுகிறது. இச்சிலையை, மாடுகள் கட்டி வைப்பதற்காக, அங்குள்ளோர் பயன்படுத்தி வருகின்றனர். சமணர்களின் அடையாளங்களை, அரசு பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.