உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

வெள்ளகோவில்: மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூவோடு எடுத்தும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். வெள்ளகோவில் அருகே சொரியங்கிணற்றுப்ப்பாளையம், மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காவிரி தீர்த்தம் செலுத்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் முதல் பூவோடு வைத்து பூ வளர்த்தல், மாலை ஆறு மணி அளவில் பெண்கள் 69 பேர் உட்பட 105 பேர் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக பக்தி பரவசத்தில் வந்தனர். 25 பேர் அலகு குத்தி வந்தனர். நா, அலகு, மற்றும் 4, 6, 12, அடி நீளம் ,முறையே அலகு குத்தியும், கத்தி அலகு குத்தியும் ஆடி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !