உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

பெண்ணாடம் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

பெண்ணாடம்:கார்த்திகை தீபத்தையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தி சிறப்பு வழிபாடு நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 11) காலை 8:30 மணியளவில் மூலவர் பிரளயகாலே ஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.தொடர்ந்து, வினை தீர்த்த விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !