காட்டுவனஞ்சூரில் ஐயப்பசாமி படி பூஜை
ADDED :2488 days ago
சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் முருகன் கோவில் வளாகத்தில் ஐயப்பசாமிக்கு படி பூஜை நடந்தது.குருசாமி ராதாமணி தலைமை தாங்கினார். முர்த்தி, சுப்ரமணி வரவேற்றனர். குருசாமிகள் மோகன், பிரகாஷ், கிருஷ்ணன், லட்சுமி காந்தன், குருசாமி, பாலுசாமி, மாரியா பிள்ளை, காமராஜ், ஏழுமலை முன்னிலை வகித்தனர். 18ம் படி பூஜை மற்றும் பஜனை நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.