சின்னத்தடாகம் அருகே விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :2192 days ago
பெ.நா.பாளையம்:சின்னத்தடாகம் அருகே தடாகம் புதூரில், புதியதாக திருப்பணிகள் செய்யப் பட்ட சக்தி சித்த செல்வ விநாயகர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழா, கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜை, நவகிரக ஹோமம், தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாரி கொண்டு வருதல், கோபுர கலசம் அபிஷேகம் ஆகியன நடந்தன.
முதல், இரண்டாம் கால பூஜைகள் நடந்தன. மகா கும்பாபிஷேகம், கோ பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தினசரி மண்டல பூஜை நடத்த ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.