உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சுக்கிரனால் யோகம்

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) சுக்கிரனால் யோகம்

உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் முக்கிய கிரகங்களில் 8ல் இருக்கும் சுக்கிரன் சாதகமாக நின்று  தொடர்ந்து நன்மை தருவார். இது தவிர செவ்வாய் டிச. 28வரையும், புதன்  டிசம்பர் 21 முதல் ஜன. 7 வரையும் நற்பலன் கொடுப்பர்.
இதனால் ஆடம்பர வசதிகள் பெருகும்.  மகிழ்ச்சி மனதில் நிலைக்கும்.  சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர்.

செவ்வாயால் பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல்  பிறக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. ஆடை,  ஆபரணங்கள் வாங்கலாம். டிச.21க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் சேரும். கணவன், மனைவி இடையே  அன்பு மேலோங்கும். ஜன.7க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம்.  பொறுமையுடன் இருக்கவும்.

சனி பகவான் 8ம் இடத்தில் இருப்பதால் உறவினர் வகையில் மனக்கசப்பு,  கருத்து வேறுபாடு ஏற்படும்.

பெண்களுக்கு சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் நிறைவேறும்.  ஆடம்பர  வசதிகள் பெருகும். சகோதரர்கள் ஆதரவால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.  உங்கள் மீதான அவப்பெயர் டிச.21க்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல்  மறையும். அதன் பின் செல்வாக்கு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.  சுய தொழில் புரியும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு சுக்கிரன் பொருளாதார வளம், தொழில் வளர்ச்சியை  அளிக்கிறார்.
* வியாபாரிகள் வாடிக்கை யாளர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச. 21 முதல் ஜனவரி 7 வரை  எதிர்பாராத நன்மை நடக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு சக பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.
* மருத்துவர்கள்  மாத முற்பகுதியில் எதிரி தொல்லையை முறியடிக்கும்  வல்லமை பெறுவர்.
* வக்கீல்களுக்கு  டிச.21 முதல் ஜன.7 வரை எதிர்பாராத நன்மை கிடைக்கும்.   வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர்.  கோரிக்கைகளை டிச.28க்குள் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.
* அரசியல்வாதிகள் மாத முற்பகுதியில் சிறப்பான பலன் காண்பர். எதிர்பார்ப்பு  டிச.28க்குள் நிறைவேறும்.
* சமூக நல சேவகர்களுக்கு மேன்மையான காலகட்டமாக அமையும்.  
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு கிடைக்கப்  பெறுவர். சிலர் பெண்களால் உயர்ந்த அந்தஸ்து பெறுவர்.  
* விவசாயிகள் பாசிப்பயறு, துவரை, கீரை, பழவகைகள் மூலம் அதிக மகசூல்  காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் டிச.28க்குள் கைகூடும். வழக்கு  விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை வகையில்  எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
* பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியரின் அறிவுரை பயனுள்ளதாக  இருக்கும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கல்வி வளர்ச்சிக்கான காலகட்டம்.

சுமாரான பலன்கள்:

* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் சாதகமான நிலை காணப்படவில்லை.
* வியாபாரிகள் அரசிடம் எதிர் பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு  சிலர் அரசு வகையில் பிரச்னையை சந்திக்க நேரிடலாம்.
* அரசு பணியாளர்கள் சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வேலையில்  கவனமாக இருக்கவும்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.7க்கு பிறகு அதிகாரிகளிடம்  அனுசரித்து போகவும். பணிச்சுமை ஏற்படலாம். வேலையில் பொறுமையும்  நிதானமும் தேவை.
* மருத்துவர்களுக்கு டிச.28க்கு பிறகு வீண் அலைச்சல் ஏற்படலாம்.
* ஆசிரியர்கள் சகஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வர். வீண் பகை, மன  உளைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.  
* அரசியல்வாதிகள் டிச.28க்கு பிறகு சுதந்திரமற்ற நிலையில் இருப்பர். பிறருக்கு  கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

* நல்ல நாள்:

டிச. 21,22, 23, 24,25,30,31, ஜன.1,2,3,7,8, 11,12,13

* கவன நாள் டிச.26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்
●  சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
●  வியாழனன்று குரு பகவானுக்கு நெய் விளக்கு
●  செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !