உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) எதிர்பார்ப்பு நிறைவேறும்

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) எதிர்பார்ப்பு நிறைவேறும்

மதிநுட்பம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் டிச.21 வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான விருச்சிகத்தில்  இருந்து நன்மை கொடுப்பார். அதன்பின் அவரால் நற்பலனை கொடுக்க முடியாது. ஆனால் அவர் ஜன. 7ல் 8-ம் இடமான மகரம் ராசிக்கு வந்து நன்மை கொடுப்பார். இது தவிர  செவ்வாய் டிச.28 முதல் நற்பலன் கொடுப்பார். மேலும் குரு, சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மையளிப்பர். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்  தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும்.  ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.

சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள்  ஆதரவுடன் செயல்படுவர். புதனால் மாதத் தொடக்கத்தில் திருமணம், புதுமனை  புகுதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். டிச.21க்கு பிறகு குடும்பத்தில்  குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சியில் அடிக்கடி பங்கேற்பர்.  சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பணம், பொருள் கிடைக்கும்.  டிச.21 முதல் ஜன.7 வரை அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் வகையில் சற்று  ஒதுங்கி இருக்கவும். அதன் பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்தாடை,  அணிகலன்கள் வாங்கலாம். கணவன் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு  உயரும்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  

சிறப்பான பலன்கள்:

* தொழிலதிபர்கள் அனுபவ சாலிகளின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவர்.  தங்கம், வெள்ளி, வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் கிடைக்கப் பெறுவர்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஜன.7க்கு பிறகு பதவி உயர்வு  காண்பர்.
* ஐ.டி., துறையினருக்கு சுக்கிரன் 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு  சிறப்பான காலமாக அமையும். சக பெண் ஊழியர்களின் உதவி கிடைக்கும்.
* மருத்துவர்களுக்கு டிச.28க்கு பிறகு அலைச்சல், வேலைபளு குறையும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும்
* வக்கீல்களுக்கு மாதத் தொடக்கத்திலும் இறுதியிலும் வழக்கு, விவகாரங்களில்  முடிவு சாதகமாக அமையும்.  
* ஆசிரியர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம்  அதிகரிக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் டிச.28க்கு பிறகு முக்கிய  கோரிக்கைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
* அரசியல்வாதிகள் டிச.28க்கு பிறகு உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர்.  பெண்களால் வளர்ச்சியடைவர்.
* பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். அரசு வகையில்  விருது, பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். திரையுலகில்  இருப்பவர்கள் உற்சாகமுடன் செயல்படுவர். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக  செய்து முடிக்கலாம்.
* விவசாயிகள் பாசிப்பயறு, துவரை, கொண்டைக்கடலை,  மஞ்சள், தக்காளி  மூலம் அதிக வருமானம் காண்பர். டிச.28க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம்.
* பள்ளி மாணவர்கள்  ஜன.7க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். தேர்வில் அதிக  மதிப்பெண் கிடைக்கும்.
* கல்லூரி மாணவர்கள் போட்டி களில் வெற்றி காண்பீர்கள். ஆசிரியர்களின்  அறிவுரையை ஏற்று முன்னேறுவர்.

சுமாரான பலன்கள்:

* தொழில் அதிபர்கள் நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருக்காதீர்கள்.  அவ்வப்போது அவர்களால் இடையூறு வரலாம்.
* வியாபாரிகள் அடிக்கடி வெளியூரில் தங்க நேரிடும். சிலர் தீயோர்  சேர்க்கையால் அவதியுறலாம். எனவே யாரிடமும் அனாவசியமாக நெருங்கி பழக  வேண்டாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் பணிபுரிவது நல்லது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.21 முதல் ஜன.7 வரை  அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். முக்கிய  பொறுப்புகளை வேறு  யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில்  இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படவும்.

* நல்ல நாள்:

டிச.17,18,24, 25,26,27, ஜன.2,3,4,5, 6,9,10,14

* கவன நாள் டிச.28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்
●  ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம்
●  சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
●  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !