உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயில் டிச. 26ல் திருக்கல்யாணம்

ஆரியன்காவு தர்மசாஸ்தா கோயில் டிச. 26ல் திருக்கல்யாணம்

மதுரை: கேரள மாநிலம் ஆரியன்காவு தர்மசாஸ்தா -புஷ்கலாதேவி திருக்கல்யாணம்  டிச., 26 ல் நடக்கிறது.

சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலா தேவியை தர்மசாஸ்தா மணந்ததாக ஐதீகம்  என்ப தால், திருவிதாங்கூர் மன்னர் மற்றும் கேரள தேவசம் போர்டு, சவுராஷ்டிரா  மக்களுக்கு சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கவுரப்பிப்பது வழக்கம்.

இதனால் ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மதுரை என்ற அமை ப்பு ஏற்படுத்தி சம்பந்தி உறவுமுறை கொண்டாடி, திருக்கல்யாண வைபவம்  ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடக்கிறது.

இந்தாண்டு திருக்கல்யாண விழா டிச., 24ல் துவங்குகிறது. கேரளாவில் உள்ள  மாம்பழத்துறை பகவதி என்ற ஆரியன்காவு புஷ்கலாதேவி கோயிலில் மணமகள்  அழைப்பு ஊர்வலம் பகல் 12:00 மணிக்கு துவங்குகிறது.

புஷ்கலா தேவியை ஜோதி ரூபமாக பக்தர்கள் ஆரியன்காவிற்கு அழைத்து வருவர். டிச.,  25ல் ஆரியன்காவில் மாலை 4:00 மணிக்கு ‘தாலப்பொலி’ எனும் மாப்பிள்ளை  ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம், டிச., 26ல்  இரவு 10:00 மணிக்கு தர்ம சாஸ்தா -புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏற்பாடுகளை சங்கதலைவர் கே.ஆர். ராகவன், பொதுச் செயலர் எஸ்.ஜெ.ராஜன்,  நிர்வாகிகள் மோகன், ஹரிஹரன், கண்ணன், ஆனந்தம், கமிட்டி உறுப்பினர்கள் செய்து  வருகின்றனர்.

* புஷ்கலா தேவியை ஜோதி ரூபமாக பக்தர்கள் ஆரியன்காவிற்கு அழைத்து வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !