ஐயப்ப பக்தர்களுக்கு முஸ்லிம்கள் அன்னதானம்
ADDED :2121 days ago
கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில், ஐயப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கினர்.
கிருஷ்ணகிரியில், மிலாடி நபி விழா குழுவினர், விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகளுக்கு தேவையான பூஜை பொருட்களை, ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று, மிலாடி நபி விழா குழு சார்பில், 200 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அஸ்லம் ரகுமான் பாஷா, துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஐயப்பன் கோவில் நிர்வாகி சிவதாஸ், முஸ்லிம் சகோதரர்களை வரவேற்று, கோவில் பெருமைகளை விளக்கினார். ஹிந்து, -முஸ்லிம் அனைவரும், இப்பகுதியில் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என, அறிவுறுத்தினார்.