உடுமலை தங்காத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2123 days ago
உடுமலை:உடுமலை, ஏரிப்பாளையம் தங்காத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.உடுமலை, ஏரிப்பாளையத்தில், நுாற்றாண்டுக்கும் பழமையான தங்காத்தாள் அம்மன் கோவில் உள்ளது.
கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, 14ம்தேதி, காலையில் கணபதி ஹோமம் நடந்தது. மாலையில், கும்ப அலங்காரம், முதற்கால யாக வேள்வி, வேதி கார்ச்சனை, தீபாராதனை நடந்தது.நேற்று (டிசம்., 15), அதிகாலையில், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 5:30 மணிக்கு, அம்மனுக்கு கும்பாபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடந்தது. கும்பாபிஷேகத்தை யொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.