உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் ’பிரசாதம்’ தரமானதா

திண்டுக்கல் கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கும் ’பிரசாதம்’ தரமானதா

திண்டுக்கல் : திண்டுக்கல் கோயில்களில் தரமான உணவு பொருட்களை கொண்டு தயார் செய்த பிரசாதத்தை மட்டுமே பக்தர்களுக்கு வழங்க உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத் தியுள்ளனர்.

திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் வருவாயை பொறுத்து ஆண்டு முழுவதும் மதிய வேளையில் 50 முதல் 200 பேருக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி, பிரசாதம் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் உணவு பாதுகாப்பு துறை அறிவுரைப்படி, தரமான பொருட்களில் மட்டுமே தயார் செய்ய வேண்டும்.

செயற்கை வண்ணம், சுவையூட்டி சேர்க்க கூடாது. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் குறை ந்த கட்டணத்தில் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், லட்டு, முறுக்கு, வடை, பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. இதனை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். தயாரிப்பவர் நோயுள்ளவராக இருக்க கூடாது. தயாரிப்பில் ஈடுபடும் போது கை, தலையில் உறை அணிந்திருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய், நெய்யை மீண்டும் உபயோகிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தரம் ஆய்வு: நியமன அலுவலர் நடராஜன் கூறுகையில், ”வழக்கத்தை விட மார்கழி மாதத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கான பிரசாதம் தரமான பொருட்களால் தயார் செய்ய வேண்டும். ஆய்வில் கலப்படம் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !