உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் அய்யப்ப சுவாமி சக்தி பூஜை விழா

விருத்தாசலம் அய்யப்ப சுவாமி சக்தி பூஜை விழா

விருத்தாசலம் : விருத்தாசலம் சபரி அய்யப்ப சுவாமி கோவிலில், சக்தி பூஜை விழாவில் ஏராள மானோர் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் பாலக்கரை அன்னமய நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சபரி அய்யப்ப சுவாமி கோவிலில், 9ம் ஆண்டு சக்தி பூஜை விழா, கடந்த மாதம் துவங்கியது.

இதையொட்டி, நேற்று 16ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், நெய் அபிஷேகம் நடந்தது.காலை 10:00 மணிக்கு மேல் மணிமுக்தாற்றில் இருந்து கருப்பன்ன சுவாமி, மஞ்சள் மாதா உள்ளிட்ட வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து, வேண்டுதல் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !