மடத்துக்குளம் அருகே ஐயப்பன் திருவீதியுலா
ADDED :2203 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, சாலரப்பட்டி ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கும் 10ம் ஆண்டு மண்டலபூஜை மற்றும் திருவீதி உலா இன்று 17ம் தேதி நடக்கிறது.
சாலரப்பட்டியில், ஆண்டுதோறும் மாலை அணிந்து, சபரிமலை சென்று திரும்புவது வழக்கம். இதற்கு மண்டல பூஜை நடத்தி வணங்குவர். இன்று (டிசம்., 17ல்), 10வது ஆண்டு மண்டல பூஜை நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதன் தொடக்கமாக, காலை, 5:00 முதல், 6:00 மணி வரை, மகா கணபதி பூஜை, மூலமந்திர காயத்ரி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர், ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை, மகாதீபாராதனை செய்யப்படுகிறது.காலை, 9:00 மணிமுதல் மாலை, 4:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. 4:00 மணிக்கு மேல் ஐயப்பன் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடு களை ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.