உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் மார்கழி முதல் நாள்

அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் மார்கழி முதல் நாள்

அன்னுார் : அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் காலை 4:30 மணிக்கு அபிஷேக பூஜையும், 5:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது.

கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 6:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிலில் பெருமாளை வழிபட்டனர்.கணேசபுரம் அடுத்த, குருக்கம் பாளையத்தில், நாம சங்கீர்த்த பஜனை நடக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு, செல்வ விநாயகர் கோவிலில் பஜனை துவங்கி மாகாளியம்மன் கோவில் வழியாக சென்று, மீண்டும் செல்வ விநாயகர் கோவிலை பஜனை குழு அடைந்தது.

பஜனை குழுவை வரவேற்று, வீடுகளின் முன்புறம் கோலம் போடப்பட்டிருந்தது. மார்கழி முழுவதும், பஜனை ஊர்வலம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !