உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கவசத்தில் ஜொலித்த அய்யப்ப சுவாமி; பக்தர்கள் பரவசம்

தங்க கவசத்தில் ஜொலித்த அய்யப்ப சுவாமி; பக்தர்கள் பரவசம்

கோவை; ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க, 75 வது பூஜா மஹோத்ஸவ விழாவில் சுவாமிக்கு இன்று அலங்கரிக்கப்பட்டிருந்த தங்ககவச அலங்காரம் பக்தர்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. 


ராம் நகர்  சத்திய மூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவ விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை 6:30 மணிக்கு ஸ்ரீ நவசண்டி யக்ஞ மஹா சங்கல்பமும், 7:30 க்கு ஸப்தஸதி பாராயணமும், 8 மணிக்கு ஸ்ரீ ஸீக்த ஹோமமும், 9:30 க்கு நவசண்டிஹோமம் நடந்தது.   பகல் 11:45 க்கு அன்னதானமும், 12:30 க்குமஹாபூர்ணாஹூதியும், பகல் 1:30 க்கு மஹா தீபாராதனை நடந்தது. மாலை 6:15 க்கு வினயாகார்த்திக் ராஜன் மற்றும் காந்தாரா புகழ் ஸ்ரீ சாய்விக்னேஷின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.  நாளை காலை 7 மணிக்கு ஸ்ரீஹரிஹரபுத்ர மூலமந்த்ர ஹோமம், புருஷஸீக்தஹோமம், காலை 8 மணிக்கு சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், 8:30 க்கு ஸ்வயம்வர பார்வதி ஹோமம், 9 மணிக்கு அய்யப்பசுவாமிக்கு லட்சார்ச்சனை, 10 மணிக்கு அஷ்டாபிஷே கம், 11:45 மணிக்கு அன்னதானம், 12:30 க்கு மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனையும் மாலை 6:15 மணிக்கு மான்டலின் சிப்லிங்ஸின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.  தொடர்ந்து டிச. 28 வரை நிகழ்ச்சிகள் நடைபெறும் ஏற்பாடுகளை அய்யப்பன் பூஜா சங்க நிர்வாகிகள்  செய்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !