உடுமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
ADDED :2137 days ago
உடுமலை : மடத்துக்குளம், அரியநாச்சிபாளையம் ஜோதி நகரில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது.
கோவில், ஏழாம் ஆண்டு மண்டல பூஜை துவக்க விழா மற்றும் 108 பால்குட கலச அபிஷேக விழா, வரும் 28 மற்றும் 29 ம் தேதிகளில் நடக்கிறது.வரும் 28ம் தேதி மாலையில், குதிரை வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள், அமராவதி ஆற்றுக்கு ஆராட்டுக்குச்செல்லுதல், மாலை, 5:00 மணிக்கு ஆற்றில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மறுநாள், காலை, 7:00 மணிக்கு, 108 பால்குட கலச பூஜை நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் 24 வகை மூலிகை அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் பஜனை, அன்னதானம் நடக்கிறது.