வாழப்பாடி சாய்பாபா கோவிலில் சமபந்தி விருந்து
ADDED :2155 days ago
வாழப்பாடி: சாய்பாபா கோவிலில், சமபந்தி விருந்து நடந்தது. வாழப்பாடி, ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. அந்த கோவிலை அமைத்த ஜவஹரின், 50ம் ஆண்டு பிறந்தநாள், நிறுவனர் தின பொன்விழாவாக, நேற்று 17ம் தேதி கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, ஏழைப்பெண்கள், 50 பேருக்கு இலவச சேலை, சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கியப்பேரவை, உலக தமிழ் கழகம் சார்பில், கவியரங்கம் நடந்தது. அதில், பேரவை செயலர் சிவ.எம்கோ, ஆசிரியர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். இதில், லயன்ஸ் கிளப், ஜே.சி.ஐ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.