உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடும் குளிர்: சுவாமி சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு

கடும் குளிர்: சுவாமி சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு

உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. வாரணாசியில் உள்ள படா கணஷே் கோவிலில் கருவறை தெய்வத்தை பூசாரிகள் கம்பளியால் மூடி வைத்துள்ளனர். மேலும், அங்குள்ள சிவன் கோவில்களில் இருக்கும் சிவலிங்கங்களும் சால்வையால் மூடப்பட்டே காட்சியளிக்கின்றன. அதேபோல், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், சுவாமி சிலைகளுக்கு சிறிய கம்பளி ஸ்வெட்டர் மற்றும் சால்வைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான, காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !