வெள்ளகோவில் கடைவீதியில் ஐயப்ப சுவாமி நகர்வலம்
ADDED :2141 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் ஐயப்ப சாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று உற்சவர் செண்டை மேளம் முழங்க கடைவீதி சாலைகளில் நகர்வலம் வந்தார். ஐயப்ப சாமி கோவிலில் இருந்து புறப்பட்டு பாரதியார் வீதி, புது பஸ் ஸ்டாண்ட் ,கடைவீதி, கோவை ரோடு, சென்று, திரும்பவும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது. ஐயப்ப சுவாமிக்கு ஆங்காங்கே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வலம் வந்தார். ஊர்வலத்தில் வண்ண வாண வேடிக்கைகள் இடம்பெற்றது. நகர்வலத்திற்கான ஏற்பாடுகளை ஐயப்பா பூஜா சங்கம் மற்றும் சேவா சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.