விருதுநகர் சிவன் கோயில்களில் அஷ்டமி வழிபாடு
ADDED :2198 days ago
விருதுநகர்: சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. மார்கழியின் சுக்லபட்ச திதியில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் அனைத்து சிவன் கோயில்களிலும் வழிபாடு நடப்பது வழக்கம். இதையொட்டி விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சுவாமி வீதி உலா நடந்தது. அரிசி தானம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதே போன்று
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் வழிபாடு நடந்தது.